இந்தியாவில் 23 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு: 46,091 பேர் பலி

கொரோனா காய்ச்சல் முகாம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,963 பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 834 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60,963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 22,68,675-ல் இருந்து 23,29,638 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 56,110 குணமடைந்துள்ளதால் இதுவரை 16,39,599 பேர் குணமடைந்துள்ளனர். இது 70.38 சதவீதமாகும். 834 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 46,091 ஆக உயர்ந்துள்ளது. இது 1.98 சதவீதமாகும்.

தற்போது 6,43,948 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது 27.64 சதவீதமாகும்.

நேற்று மட்டும் 7,33,449 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதுவரை 2,60,15,297 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

malaimalar