ஏர் இந்தியா விமான விபத்து: சிகிச்சை பெற்று வந்த பயணிகளில் 85 பேர் டிஸ்சார்ஜ்

விமான விபத்தில் காயம் அடைந்தவர்

கோழிக்கோடு விமான விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 85 பேர் டிஸ்சாரஜ் செய்யப்பட்டுள்ளனர்.

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு 190 பேருடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்திற்குள்ளானது. இதில் இரண்டு விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.

23 பேர் உடனடியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 149 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று வரை பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 85 பயணிகள் பூரணகுணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

காயம் அடைந்த பயணிகளுக்கான சிகிச்சை செலவு அனைத்தையும் கேரள அரசு ஏற்கும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

malaimalar