தந்தை விரைவில் வீடு திரும்புவார் : எஸ்.பி.பி.சரண்

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதை லண்டன் டாக்டர்களும் உறுதி செய்துள்ளனர். மேலும் அவர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து அவரது மகன் சரண் கூறியதாவது: எனது தந்தை ஐ.சி.யு.,வில் இருந்து பிரத்யேக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். டாக்டரிடம் கையை உயர்த்தி சைகை காட்டியுள்ளார். மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சியால் மூச்சுவிடுதலில் சிரமம் குறைந்து குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் பூரண குணமடைவார். கூடிய சீக்கிரமே வீடு திரும்புவார். எனது தாயாரும் விரைவில் குணமடைந்து வருவதால் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார். அனைவரது பிரார்த்தனையும் பலனை தந்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

dinamalar