இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதித்த 93,355 பேர் குணமடைந்தனர்

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 93,355 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், மீண்டவர்களின் எண்ணிக்கை 43,96,399 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், நேற்று ஒரே நாளில் 93,355 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54.87 லட்சத்தை தாண்டியுள்ளது. ஒரே நாளில் 1,130 பேர் உயிரிழந்ததால், இந்தியாவில் கொரோனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 86,961 ஆக அதிகரித்துள்ளது.

சோதனைகள்:

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 7,31,534 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை 6 கோடியே 43 லட்சத்து 92 ஆயிரத்து 594 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.