ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் – இந்திய வீரர் வீரமரணம்

பாதுகாப்புப் பணியில் வீரர்கள்

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறி தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர் வீரமரணம் அடைந்தார்.

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் சுபேதார் சுக்தேவ் சிங் வீரமரணம் அடைந்தார்.இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

malaimalar