கொரோனா பாதிப்பால் இந்தியாவில் 60 வயதுக்குக் கீழ் 47% பேர் மரணம்

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் 60 வயதுக்குக் கீழ் 47 சதவீதம் பேர் மரணம் அடைந்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி; இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  63,509 புதிய கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யபட்டூள்ளன. அ. 730 மரணங்கள் நிகழ்ந்து உள்ளன.

இந்தியாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு எஎண்ணிக்கை 72.39 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 730 இறப்புகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் இறப்பு எண்ணிக்கை 1,10,586 ஆக உயர்ந்து உள்ளன என மத்திய சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் 60 வயதுக்குக் குறைவானவர்கள் 47 சதவீதம் பேர் மரணம் அடைந்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. குளிர்காலத்தில் சுவாச நோய்கள் அதிகரிக்கும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

dailythanthi