கொழும்பு : இலங்கையின் திரிகோணமலை அருகே நிலை கொண்ட புரெவி புயல் தற்போது கரையை கடந்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், இலங்கையின் திரிகோணமலைக்கு கிழக்கு வடகிழக்கு பகுதியில் 70 கி.மீ தொலைவில் புரெவி புயல் நிலை கொண்டுள்ளது. திரிகோணமலைக்கு வடக்கே புயல் கரையை கடந்துள்ளது. இந்த புயல் கன்னியாகுமரியில் இருந்து 480 கி.மீ தொலைவில் கிழக்கு வடகிழக்கு பகுதியில் நிலை கொண்டது. புயல் கரையை கடந்து வரும் நிலையில் மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.
3-ம் தேதி பாம்பன் அருகே பிற்பகலில் வரும் புரெவி புயல் பாம்பன் கன்னியாகுமரி இடையே டிச.,3ம் தேதி நள்ளிரவு அல்லது டிச.,4 ம் தேதி அதிகாலையில் கரையை கடக்கிறது.இந்த புரெவி புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டுள்ளது.
முன்னதாக புரெவி புயல் எதிரொலியாக ராமேஸ்வரம் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
புரெவி புயல் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் 6 மணிநேரமாக கனமழை பெய்து வருகிறது
dinamalar