4 படங்களில் 400 கோடி பெறும் பிரபாஸ் ?

ஒரே ஒரு படம் தெலுங்கு நடிகரான பிரபாஸின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிவிட்டது. பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளிவந்த உடன் வட இந்தியாவிலும் சினிமா ரசிகர்களுக்குத் தெரிந்த நடிகரானார் பிரபாஸ். முதல் பாகத்தில் கிடைத்த பெயரால் இரண்டாம் பாகம் வந்தபின் வசூலை அள்ளிக் குவித்தது.

அதன்பின் பிரபாஸ் நாயகனாக நடித்து வெளிவந்த சாஹோ படம் மற்ற மொழிகளில் வசூல் ரீதியாக தோல்வியடைந்தாலும் ஹிந்தியில் மட்டும் வெற்றி பெற்றது.

தற்போது ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். அடுத்து ஆதி புருஷ், சலார், நாக் அஸ்வின் இயக்கும் படம் என மூன்று படங்களில் தொடர்ச்சியாக நடிக்க உள்ளார்.

ஒரு படத்திற்கு சராசரியாக 75 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம் பிரபாஸ். அதோடு படத்தின் பட்ஜெக்குத் தகுந்தபடி அவற்றின் வசூலில் சில குறிப்பிட்ட சதவீதத்தையும் பெற்றுக் கொள்கிறாராம். சராசரியாக குறைந்தபட்சம் ஒரு படத்திற்கு 100 கோடி வரை அவருக்கு வருமானம் எனத் தகவல்.

படத்தில் நடிப்பதன் மட்டும் மூலம் ஹிந்தி நடிகர்களுக்கு இணையான சம்பளத்தைப் பெற ஆரம்பித்துவிட்டார் பிரபாஸ் என்கிறார்கள். தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் தற்போதைக்கு அவர்தான் அதிக சம்பளம் பெறும் நடிகர் என்றும் கூறுகிறார்கள்

dinamalar