தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் கமல்ஹாசன் – ’லட்சியத்திற்காகத் திரள்வதன் பெயர் புரட்சி’ என்றும் டுவீட்

பிரசாரத்தை தொடங்கினார் கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை மதுரையில் தற்போது தொடங்கியுள்ளார்.

மதுரை: தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் பிரசார நிகழ்ச்சியை தற்போதை தொடங்கிவிட்டன.

அந்த வரிசையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை மதுரையில் தற்போது தொடங்கியுள்ளார். “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற முழக்கத்துடன் அவர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

பெரியார் பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் தொடர்ந்து மேல மாசிவீதி-வடக்கு மாசிவீதி சந்திப்பில் பேசினார்.

காமராஜர் ரோட்டில் உள்ள தொழில் வர்த்தக சங்க அரங்கில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்களுடன் கமல்ஹாசன் கலந்துரையாடுகிறார்.

மதுரையில் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் கமல்ஹாசனுக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள பதிவில்,

காசுக்காகக் கூடுவது கும்பல்; லட்சியத்திற்காகத் திரள்வதன் பெயர் புரட்சி! மக்கள் புரட்சியை மதுரையில் நிகழ்த்திக் காட்டிய எம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும், அணிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். எதுவும் தடையில்லை சீரமைப்போம் தமிழகத்தை என தெரிவித்துள்ளார்.

malaimalar