கருப்பங்காட்டு வலசை நாகரிக கிராமமாக மாற்றும் முயற்சியில் நடிகை, 4 பேர் மர்மமான முறையில் மரணம் – கருப்பங்காட்டு வலசு விமர்சனம்

நடிகர்: எபிநேசர் தேவராஜ்

நடிகை: நீலிமா இசை, ஆரியா

டைரக்ஷன்: செல்வேந்திரன்

இசை : ஆதித்யா சூர்யா

ஒளிப்பதிவு : ஷ்ரவன் சரவணன்

கருப்பங்காட்டு வலசை நாகரிக கிராமமாக மாற்றும் முயற்சியில் நடிகை நீலிமா இசை. 4 பேர் மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள். கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா, “கருப்பங்காட்டு வலசு” படத்தின் விமர்சனம்.

200 பேர்கள் வசிக்கும் ஒரு குக்கிராமம், கருப்பங்காட்டு வலசு. அடிப்படை வசதிகளும், வளர்ச்சியும் இல்லாத கிராமம். அந்த ஊரை சேர்ந்த நீலிமா இசை அமெரிக்காவில் படித்துவிட்டு, சொந்த கிராமத்துக்கு வருகிறார். கழிவறை கூட இல்லாத தன் கிராமத்தை பார்த்து ஆதங்கப்படுகிறார்.

கருப்பங்காட்டு வலசை நாகரிக கிராமமாக மாற்ற முயற்சிக்கிறார். அந்த முயற்சியில் அவர் ஓரளவு வெற்றியும் பெறுகிறார். அதனால் ஊர் மக்கள் மத்தியில் நல்ல பெயர் சம்பாதிக்கிறார்.

இந்த நிலையில், அந்த ஊரில் 4 பேர் மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா, நான்கு பேரின் மர்மமான மரணத்துக்கு காரணம் என்ன? என்பதற்கான பதில் படத்தின் இரண்டாம் பகுதியில் இருக்கிறது.

அமெரிக்காவில் படித்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய பெண்ணாக நீலிமா இசை, படம் முழுக்க வருகிறார். கதாபாத்திரத்தைப் போலவே மென்மையான தோற்றம். 4 பேரின் மரணம் பற்றி போலீஸ் விசாரிக்கும் காட்சிகளில், சோகம் காட்டுகிறார். படத்தில் ஒரே தெரிந்த முகம், இவர்தான்.

‘பச்சைக்கிளி வாத்தியார்’ வேடத்தில் வரும் எபனேசர் தேவராஜ் நடிப்பிலும், தோற்றத்திலும் அனுதாபப்பட வைக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக விஜய் நெல்சன், நொண்டி கருப்பனாக மாரி செல்லதுரை, மல்லியாக ஆரியா, ரெட்டைமலையாக கவுரி சங்கர், புகைவண்டி வேலனாக ஜித்தேஷ் டோனி, நீலிமாவின் அப்பாவாக சத்தியன் ஆகியோர் கதாபாத்திரங்களாக மாற முயற்சித்து இருக்கிறார்கள்.

ஷ்ரவன் சரவணன் ஒளிப்பதிவும், ஆதித்யா சூர்யாவின் இசையும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து இருக்கின்றன. செல்வேந்திரன் இயக்கியிருக்கிறார். இடைவேளைவரை காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. பின்னர், எதிர்பாராத திருப்பங்களும், யூகிக்க முடியாத காட்சிகளுமாக வேகமான கதையோட்டம்

malaimalar