சோனு சூட்டுக்கு குவியும் ஹீரோ வாய்ப்பு

சோனு சூட்

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் வில்லனாக நடித்து பிரபலமான சோனு சூட்டுக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் குவிகிறதாம்.

தமிழில் கள்ளழகர், சந்திரமுகி, கோவில்பட்டி வீரலட்சுமி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் சோனுசூட். இந்தி நடிகரான இவர் ஏராளமான பாலிவுட் படங்களில் வில்லன் வேடங்கள் ஏற்றுள்ளார்.

கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு செய்த உதவிகள் மூலம் சோனுசூட் இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்பினார். 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி, இன்சூரன்ஸ் வசதிகளோடு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தந்தார். வெளிநாட்டில் தவித்த தமிழக மாணவர்களை தனிவிமானத்தில் அழைத்து வந்தார். இதனால் நாடு முழுவதும் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.

இந்நிலையில், வில்லனாக நடித்துவந்த சோனுசூட்டுக்கு தற்போது ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் குவிகிறதாம். இதுகுறித்து அவர் கூறும்போது, “எனக்கு தற்போது ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. ஐந்து நல்ல கதைகள் உள்ளன. நான் இதை ஒரு புதிய ஆரம்பமாக கருதுகிறேன். எனது பெற்றோரின் ஆசிர்வாதம் பலன் அளித்துள்ளது” என்றார்

malaimalar