ராஜஸ்தானில் பறவை காய்ச்சல் : ஒரே நாளில் 250 காகங்கள் பலி

ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நாளில் பல்வேறு பகுதிகளில் ஒரே நாளில் 250 காகங்கள் பலியானதை அடுத்து பறவைக்காயச்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கால்நடைத்துறை அதிகாரி குஞ்சிலால் மீனா தெரிவித்து இருப்பதாவது: தலைநகர் ஜெய்ப்பூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் அதிகமான பறவைகள் பலியாகி உள்ளது. இதனையடுத்து மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை மற்றும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இறந்த பறவைகளில் பெரும்பாலனவை காகங்கள் ஆகும். இவை கோட்டா மற்றும் ஜோத்பூர் பகுதிகளில் அதிகம் காணப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி ஜலவரில் காகம் இறப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இறந்த பறவைகளின் மாதிரிகள் ம.பி.,மாநிலம் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு பறவை காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டது.

ஜல்வார் பகுதியில் 100, பாரன் பகுதியில் 72 மற்றும் கோட்டா பகுதியில் 47, பாலி யில் 19 மற்றும் ஜோத்பூர் பகுதியில் 7 காகங்கள் பலியாகிஉள்ளன.

கால்நடைதுறை செயலாளர் அருஷி மாலிக் மற்றும் கூடுதல் இயக்குனர் பவானி ரத்தோர் கூறுகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வீட்டு விலங்குகளுக்கும் இந்த வைரஸ் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு உள்ளது. பலியான பறவைகள் வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் புதைக்கப்படுகிறது.என கூறினர்.

malaimalar