அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் வரை தமிழசை கேட்கிறது – ப.சிதம்பரம் டுவீட்

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் வரை தமிழசை கேட்கிறது என்று ப.சிதம்பரம் டுவீட் செய்துள்ளார்.

புதுடெல்லி, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்தி மொழியே இந்தியாவின் ஆட்சி மொழி என்று திட்டமிடுபவர்களை அடையாளம் காண்பது பிற மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவர்களின் கடமை என்று உணர்வோம். ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்று பாடிய பாரதி நம்மை வானுலகிலிருந்து வாழ்த்துகிறார்.

பிரிஸ்பேன் ஆஸ்டிரேலியாவிலிருந்து அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் வரை தமிழோசை கேட்கிறது, நம் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது என பதிவிட்டுள்ளார்.

dailythanthi