இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,649- பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,649- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி, இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது.  கடந்த 24 மணி நேரத்தில் 11,649- பேருக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து 9,489-பேர் ஒரே நாளில் குணம் அடைந்துள்ளனர். அதேபோல், 90 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 09 லட்சத்து 16 ஆயிரத்து 589- ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 06 லட்சத்து 21 ஆயிரத்து 220- ஆக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 732 ஆகும்.  தொற்று பாதிப்புடன் நாடு முழுவதும் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 39- ஆயிரத்து 637- ஆக உள்ளது.  கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 82 லட்சத்து 85 ஆயிரத்து 295- ஆக உள்ளது.

dailythanthi