காஷ்மீரில் என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீர் ஷோபியானில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரின் ஷோபியானில்  பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிப்பிட்ட இடத்திற்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படையினருடன் இணைந்து பயங்கரவாத வேட்டையில் ஈடுபட்ட காஷ்மீர் காவலர் மொகமத் அல்தாஃப் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

dinamalar