பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு: இந்தியாவில் புதிதாக 46 ஆயிரத்து 951 பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ்

கொரோனா பாதிப்புக்கு ஆளாகி பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பெற்ற சிகிச்சையின் பலனாக குணம் அடைகிறவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிப்பது ஆறுதல் அளிக்கும் அம்சமாக இருக்கிறது.

புதுடெல்லி: நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும்கூட, ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பது கவலை அளிக்கும் அம்சமாக அமைந்துள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,46,081 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 46,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில்  212 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,59,967 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு ஆளாகி பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பெற்ற சிகிச்சையின் பலனாக குணம் அடைகிறவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிப்பது ஆறுதல் அளிக்கும் அம்சமாக இருக்கிறது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,11,51,468 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 21,180 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,34,646 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நாடு முழுவதும்  4,50,65,998 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

malaimalar