மேற்கு வங்காள மாநிலம் நரேந்திரபூர் பகுதியில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

மேற்கு வங்காள மாநிலம் நரேந்திரபூர் பகுதியில் 56 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு மாநில போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம் நரேந்திரபூர் என்ற இடத்தில் 56 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு மாநில போலீஸ் தகவல்  தெரிவித்துள்ளது.

காந்திப்போட்டா என்ற இடத்தில் வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள குடிசை வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது  அங்கு வெடிக்கும் நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 56 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாக  நரேந்திரபூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

dinamalar