பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமனுக்கு ‘சீரம்’ தலைவர் நன்றி

புதுடில்லி: கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பை அதிகரிக்க, மத்திய அரசு நிதியுதவி வழங்கியதற்கு, ‘சீரம் இன்ஸ்ட்டிட்யூட்’ நிறுவன தலைமை செயல் அதிகாரி, அதர் பூனாவாலா நன்றி தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சகம், ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும், சீரம் நிறுவனத்திற்கு, 3,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. ‘கோவாக்சின்’ தடுப்பூசி மருந்து தயாரிக்கும், பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு, 1,500 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இதனால், சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி தயாரிப்பு இரு மடங்கு உயர்ந்து, 20 கோடி, ‘டோஸ்’ ஆக அதிகரிக்கும்.

இந்நிலையில், சீரம் நிறுவனத்தின் அதர் பூனாவாலா வெளியிட்டுள்ள செய்தி:இந்தியாவில் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் துறையினர் சார்பில், பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி. உங்களின் உறுதியான கொள்கை மாற்றங்கள் மற்றும் நிதியுதவிகாரணமாக, இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் சப்ளை அதிகரிக்க வழி ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

dinamalar