முதலில் கொரோனா வைரசை எதிர்த்து போராடுவோம் – மம்தா பானர்ஜி பேச்சு

கொரோனா வைரசை எதிர்த்து முதலில் போராடுவோம் என்று மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா, மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துள்ளது. நடந்து முடிந்த மேற்குவங்காள தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக 77 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது.

ஆட்சியை தக்க வைத்துள்ள மம்தா பானர்ஜி 3-வது முறையாக மேற்குவங்காள முதல்மந்திரி பதவியேற்க உள்ளார். இந்நிலையில், ஆட்சியை தக்கவைத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி இன்று தனது ஆதரவாளர்களை சந்தித்தார்.

அப்போது மம்தா பேசியதாவது, நான் ஒரு தெரு போராளி. மக்களை என்னால் ஊக்கப்படுத்த முடியும். அப்பொழுதுதான் நாம் பாஜகவுக்கு எதிராக போராட முடியும். 2024 பாராளுமன்ற தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட முடியும் என்று நான் நினைக்கிறேன். கொரோனா வைரசை எதிர்த்து முதலில் போராடுவோம்.

வன்முறை தொடர்பாக பாஜக பழைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. இதுதான் அவர்களின் பழக்கம். நான் வன்முறையை விரும்புவதில்லை. பாஜக இதை ஏன் செய்கிறது? பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற பிறகும் நாங்கள் எந்த வித கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை’ என்றார்.

dailythanthi