மராட்டியத்தில் கனமழைக்கு இடையே கட்டிடம் இடிந்து விழுந்தது- 7 பேர் உயிரிழப்பு

மராட்டியத்தில் கனமழைக்கு இடையே கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

மும்பை, மராட்டியத்தில் கடந்த ஜூன் 9-ந்தேதி பருவ மழைக்காலம் தொடங்கியது. கடந்த சில நாட்களாக மும்பை உள்பட புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த 22-ந்தேதி மும்பையில் கனமழை கொட்டித்தீர்த்தது.

இதன் காரணமாக நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. கனமழையால், மாநிலத்தின் பல இடங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இந்திய கடற்படை உதவியை மராட்டிய அரசு மீட்பு பணிக்கு நாடியுள்ளது. இதற்கிடையே,  மும்பையின் கோவாண்டி பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

dailythanthi