புதுச்சேரியில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் நலத்திட்டமாக வழங்கப்பட்டது. இலவச பெட்ரோலை போட நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் வரிசைகட்டி நின்றனர்.
கடந்த காலங்களில் புதுச்சேரியில் தமிழகத்தைவிட பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கும். கொரோனா காலங்களில் போடப்பட்ட வரி மற்றும் மத்திய அரசின் விலையேற்றம் காரணமாக பெட்ரோல் விலை 100 யை தாண்டியது.
இந்நிலையில் தமிழ்கத்தில் தற்போது 3 ரூபாய் பெட்ரோல் குறைக்கப்பட்டதால் பெட்ரோல் விலை 100 க்கு கீழே குறைந்தது. இந்நிலையில் புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு பெட்ரோல் கொடுக்கும் நலத்திட்ட முகாம் நடத்தப்பட்டது.மளிகை பொருட்கள், காய்கறிகள் , பணம் உள்ளிட்டவைகளை இதுவரை நலத்திட்டங்களாக கொடுக்கப்பட்டு வந்த நிலையில் நூதன முறையாக புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் முன் 200 வாகன ஓட்டிகளுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தலைமையில் பொதுமக்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக அளிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் பெட்ரோலை இலவசமாக போட முண்டியடித்து வந்தனர்.
(நன்றி Tamil samayam)