உள்ளாட்சி தேர்தலில் எந்தக் கட்சிகளுடன் கூட்டணி..? கமல் திட்டவட்டம்

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக- திமுக என இருபெரும் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டார். இதில், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், விரைவில் நடைபெற இருக்கும் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்பது உறுதி. கூட்டணிக்கு வருபவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால், இருபெரும் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது.எந்த வேகத்தில் வீழ்ந்தோமோ, அந்த வேகத்தில் எழுந்து நிற்போம் ’’ என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

(நன்றி Asianetnews)