ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல்

ஈரோடு மாவட்டத்தில் இருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனாவின் அச்சுறுத்தலும் இருந்து வருவதால் கடும் எச்சரிக்கை மக்களுக்கு விடப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மக்கள் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் வெட்டுகாட்டுவலசு என்ற பகுதியில் 6 வயது சிறுமி கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.அவரது ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதேபோல் அன்னை சத்யா நகரில் வெளியூரிலிருந்து வந்த பெண் ஒருவரும் காய்ச்சலால் அவதிபட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையிலும் டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து மாநகர நல அலுவலர் முரளி சங்கர் மற்றும் சுகாதார துறை அலுவலர்கள் வெட்டுக்காட்டுவலசு, அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.மாநகராட்சி சார்பில் 2 இடங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

(நன்றி Tamil samayam)