புதுடெல்லி: போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு புதிய கோவிட் தொடர்பான பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்து, கோவிஷீல்ட் கோவிட் -19 தடுப்பூசியை அங்கீகரிக்காதது சர்ச்சை கிளப்பியுள்ளது. இது குறித்து செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 21, 2021) கருத்து தெரிவித்த வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா கோவிஷீல்ட் கோவிட் -19 தடுப்பூசியை அங்கீகரிக்காதது ஒரு பாகுபாடு கொள்கை என்றும், இது இங்கிலாந்திற்கு பயணம் செய்யும் இந்தியர்களை பெரிதளவு பாதிக்கும் என்று அவர் கூறினார்.
“இங்கிலாந்தின் புதிய வெளியுறவு செயலாளருடன் இந்திய வெளியுறவுச் செயலகம், இந்த பிரச்சினையை வலுவாக எழுப்பியுள்ளது. இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என்று சில உத்தரவாதங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக எனக்கு தக்வல்கள் வந்துள்ளன” என்று வெளியுறவுத்துறை செயலர் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், தடுப்பூசி போட்டவர்களை, குவாரண்டைன் செய்வது தொடர்பான பிரச்சினையை ‘உடனடியாக’ தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கோவிஷீல்டின் இரண்டு டோஸ்களையும் பெற்ற இந்தியப் பயணிகள் தடுப்பூசி போடாதவர்களாகக் கருதப்பட்டு, 10 நாட்களுக்குத் குவாரண்டைன் செய்ய வேண்டும் என்று இங்கிலாந்தில்புதிய பயண விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்திய அதிகாரிகள் வழங்கிய கோவிட் -19 தடுப்பூசியை அங்கீகரிப்பது தொடபான வழிகளை ஆராய இந்தியாவுடன் ஆலோசனை நடத்துவோம் இங்கிலாந்து கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், கோவிட் -19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட இந்தியா உட்பட 33 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் தனது நாட்டிற்கு வர நவம்பரில் அனுமதி வழங்கப்படும் என்று வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
ஜோ பிடன் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை மூலம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து மற்றும் கிரீஸ் உட்பட ஐரோப்பாவில் உள்ள 26 ஷெங்கன் நாடுகள், பிரிட்டன், அயர்லாந்து, சீனா, தென்னாப்பிரிக்கா, ஈரான் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட விமானப் பயணிகள் வர அனுமதி அளிக்கப்படும்.. இந்த நாடுகளில் இருந்து அமெரிக்க அல்லாத குடிமக்கள் வருவதற்கு அமெரிக்கா தடை விதித்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
(நன்றி ZEENEWS)