ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் – பிரதமர் மோடி

புதுடெல்லி:

ஆப்கானிஸ்தான் குறித்த ஜி20 நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு இத்தாலி ஏற்பாடு செய்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று பிரதமர் மோடி இதில் காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதன் விவரத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

ஆப்கானிஸ்தானில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய நிர்வாகம் இருக்க வேண்டும். பயங்கரவாதத்தின் ஆதாரமாக ஆப்கானிஸ்தான் மாறிவிடக்கூடாது. ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தங்கு தடையின்றி வழங்கப்பட வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் ஐக்கிய நாடுகள் அவை முக்கிய பங்கு வகிக்க வேண்டும். அதற்காக தனது ஆதரவு உண்டு என பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் சர்வதேச சமூகம் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உருவாக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள சூழலில் விரும்பும் படியான மாற்றத்தைக் கொண்டு வருவது கடினமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(நன்றி MAALAIMALAR)