காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சித்து எழுதிய பரபரப்பு கடிதம்

புதுடெல்லி:

பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. வரவுள்ள பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையில் இடம்பெற உள்ள 13 அம்சங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் சோனியாவை சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும் என பஞ்சாப் மாநில தலைவர் சித்து குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு பஞ்சாப் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து 4 பக்க கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், வரும் 2022-ம் ஆண்டு பஞ்சாப் சட்டசபை தேர்தலில் கட்சி வெற்றி பெறுவதற்கான 13 அம்சங்கள் கொண்ட விவரங்களை விளக்கியுள்ளார். இதுவே மீண்டெழுவதற்கான கடைசி வாய்ப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில் போதைப்பொருள் விவகாரம், வேளாண் விவகாரம், வேலைவாய்ப்பு, மணல் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை பற்றி குறிப்பிட்டு உள்ளதுடன், அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால் பஞ்சாப் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

(நன்றி Maalaimalar)