அருணாச்சல பிரதேசம்: சீன எல்லையில் அதிநவீன ஆயுதங்களை குவித்தது இந்தியா

அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவம் அதிநவீன ஆயுதங்களை தயார் நிலையில் வைத்துள்ளது.

இடாநகர், அருணாச்சல பிரதேசத்தின் எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீனா, ராணுவ போக்குவரத்துக்கான சாலைகள், முகாம்கள், ராணுவ தளங்கள் போன்றவற்றை அமைத்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் இந்திய ராணுவம் அதிநவீன ஆயுதங்களை குவித்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா-சீனா இடையே 1,300 கி.மீ. எல்லை உள்ளது. இதை பாதுகாக்கும் வகையில் ரஃபேல் போர் விமானங்கள், ஆகாஷ் ஏவுகணை, பீரங்கிகள், 300 கி.மீ. வரை சென்று தாக்கும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை இந்திய ராணுவம் தயார் நிலையில் வைத்துள்ளது. இருநாட்டு ராணுவமும் இம்மாநில எல்லையில் குவிக்கப்பட்டிருப்பதால் அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது.

dailythanthi