இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 501 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,516- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் ஏறுமுகம், இறங்குமுகம் காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,516- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 13,155- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 501- பேர் தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 44 லட்சத்து 14 ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 37 ஆயிரத்து 416- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,38,14,080 – ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,62,690 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டும் 57,54,817 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 110,79,51,225 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

dailythanthi