குன்னூர்: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழக்க காரணமான ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் விமானப்படைப்படை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆய்வு நடத்தினர்.
கடந்த 8ம் தேதி குன்னூர் அருகே நச்சப்பா சாத்திரம் கிராமத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள விமானப்படை, அதற்கான விசாரணை அதிகாரியாக ஏர் மார்ஷல் மன்வேந்தர் சிங்கை நியமித்தது. அவர், இன்று விபத்து நடந்த நஞ்சப்பா சத்திரம் பகுதியில் நேரில் ஆய்வு செய்தார்.
இதனிடையே, ஹெலிகாப்டர் எரிந்த இடத்தில் விமானப்படை அதிகாரிகள் குழுவினர் மற்றும் உள்ளூர் போலீசார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
தலைமை தளபதி பிபின் ராவத் இறுதி ஊர்வலம் தொடங்கியது
புதுடெல்லி, முப்படை தலைமை தளப்தி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. காமராஜ் மார்க் வழியாக டெல்லி கன் டோன்மென்ட் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது. கன்டோன்மென்ட் மயானத்தில் இருவரின் உடல்கள் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.