4 ஆண்டுகளில் 1,650 பேரின் உயிரை காப்பாற்றிய ரெயில்வே போலீசார்

ரெயில்வே போலீசார் கடத்தல்காரர்களிடம் இருந்து 630 பேரை காப்பாற்றி உள்ளனர்.

புதுடெல்லி, ரெயில்வே போலீசார், கடந்த 2021ம் ஆண்டில் 601 உயிர்களை காப்பாற்றி உள்ளனர்.  அவர்கள், 4 ஆண்டுகளில் 1,650 பேரின் உயிரை இதுவரை காப்பாற்றியுள்ளனர்.

இதேபோன்று, கடத்தல்காரர்களிடம் இருந்து 54 பெண்கள், 94 சிறுமிகள், 81 ஆண்கள் மற்றும் 401 சிறுவர்கள் என மொத்தம் 630 பேரை ரெயில்வே போலீசார் காப்பாற்றி உள்ளனர்.

ரெயில் பயணிகளுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடர்புடைய குற்றவாளிகளையும் ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.  கடந்த 2021ம் ஆண்டில் போதை பொருள் கடத்தல்காரர்கள் 620 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  அவர்களிடம் இருந்து ரூ.15.7 கோடி மதிப்பிலான போதை பொருளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.