மும்பையில் ஆன்லைலின் உணவு ஆர்டர் செய்த மூதாட்டி ரூ.11 லட்சத்தை இழந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் மோசடி
மும்பை: ஆன் லைன் மூலம் தற்போது பணத்தை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மர்ம கும்பல் இந்த நூதன பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகிறது.
மும்பை புறநகர் பகுதியான அந்தேரி பகுதியை சேர்ந்த ஒரு மூதாட்டி தனது செல்போனில் ஆன்லைன் மூலம் பீட்சாவுக்கு ஆர்டர் கொடுத்தார். இதற்காக அவரது வங்கி கணக்கில் இருந்து 9,999 ரூபாய் எடுக்கபட்டது. பின்னர் உழர் பழங்கள் ஆர்டர் செய்தார். இதற்காக 1,146 ரூபாய் செலுத்தினார்.
தனது கணக்கில் இருந்து அதிக பணம் எடுக்கப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இணைய தளத்தில் முகவரியை தேடி ஒரு போன் நம்பரை தொடர்பு கொண்டார்.
அதில் பேசியவன் இவரது அறியாமையை பற்றி தெரிந்து கொண்டு மொபைல் போனில் ஒருசெயலியை பதிவறக்கம் செய்யுமாறு கூறினான்.
இது மோசடி வேலை என்பதை அறியாத அந்த பெண் அவன் கூறிய செயலியை பதிவிறக்கம் செய்தார். அப்போது அந்த நபர் மூதாட்டியிடம் அவரது வங்கி கணக்கு,ரகசிய குறியீடு எண் போன்ற விவரங்கள் அனைத்தையும் வாங்கினான் அதை நம்பி மூதாட்டியும் எல்லா தகவல்களையும் கொடுத்தார்.
சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ 11லட்சத்து 78 ஆயிரம் எடுக்கப்பட்டது. இது பற்றி அவருக்கு குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ந்து போன மூதாட்டி இது குறித்து மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் மோசடி மன்னன் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.