கேரளாவில் அரசு பேருந்துகளில் சத்தமாக பேசவும், செல்போனில் சத்தமாக பாட்டு கேட்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளா, நவீன உலகில் செல்போன் நாம் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் அளவிற்கு டெக்னாலஜி காணப்படுகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் செல்போன் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மருத்துவமனை போன்ற பெரும்பாலான இடங்களில் செல்போன் உபயோகத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.

அந்த வகையில் அண்டை மாநிலமான கேரளாவில் அரசுப் பேருந்துகளில் செல்போனில் சத்தமாக பேசவும், பாட்டு கேட்கவும் தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பேருந்தில் பயணிக்கும் போது பலர் இடையூறு தரும் வகையில் செல்போன் பயன்படுத்துவதாக புகார் அளித்ததால் கேரள அரசு தக்க நடவடிக்கை எடுத்துள்ளது. பயணிகளுக்கு தொடர்ந்து தொந்தரவு அளிப்பவர் மீது நடவடிக்கை எடுக்க ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. புதிய உத்தரவை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளிலும் நடைமுறைப்படுத்துமாறு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

dailythanthi