நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.
தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 19ஆம் தேதி நடந்தது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு இந்த தேர்தல் நடந்து முடிந்தது. இதில், மொத்தமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் முடிவில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றி சாதனை புரிந்தது. இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் வாக்கு சதவீதத்தை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மாநகராட்சி:
அதன்படி, மாநகராட்சியில் திமுக 43.59 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளது. அதிமுக 24 சதவீதம், சுயேச்சைகள் 8.48 சதவீதம், பாஜக 7.17 சதவீதம், காங்கிரஸ் 3.16 சதவீதம், நாம் தமிழர் கட்சி 2.51 சதவீதம், மக்கள் நீதி மய்யம் 1.82 சதவீதம், பாமக 1.42 சதவீதம், அமமுக 1.38 சதவீதம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1.31 சதவீதம், தேமுதிக 0.95 சதவீதம், மதிமுக 0.90 சதவீதம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 0.88 சதவீதம், விடுதலை சிறுத்தைகள் கட்சி 0.72 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளன.
நகராட்சி:
நகராட்சியை எடுத்துக்கொண்டால், திமுக 43.49 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. அதிமுக 26.86 சதவீதம், சுயேச்சைகள் 14.25 சதவீதம், பாஜக 3.31 சதவீதம், காங்கிரஸ் 3.04 சதவீதம், பாமக 1.64 சதவீதம், அமமுக 1.49 சதவீதம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 0.82 சதவீதம், நாம் தமிழர் கட்சி 0.74 சதவீதம், மதிமுக 0.69 சதவீதம், தேமுதிக 0.67 சதவீதம், விடுதலை சிறுத்தைகள் கட்சி 0.62 சதவீதம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 0.38 சதவீதம், மக்கள் நீதி மய்யம் 0.21 சதவீதம் வாக்குகளை மக்களிடம் பெற்றுள்ளன.
பேரூராட்சி:
பேரூராட்சிகளை பொறுத்தவரையில் திமுக 41.91 சதவீதம், அதிமுக 25.56 சதவீதம், சுயேச்சைகள் 16.32 சதவீதம், பாஜக 4.30 சதவீதம், காங்கிரஸ் 3.85 சதவீதம், பாமக 1.56 சதவீதம், அமமுக 1.35 சதவீதம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1.34 சதவீதம், நாம் தமிழர் கட்சி 0.80 சதவீதம், விடுதலை சிறுத்தைகள் கட்சி 0.61 சதவீதம், தேமுதிக 0.55 சதவீதம், இந்திய கம்யூனிஸ்டு 0.44 சதவீதம், மதிமுக 0.36 சதவீதம், மக்கள் நீதி மய்யம் 0.07 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.
ஒட்டுமொத்த வாக்கு சதவீதம்:
ஒட்டுமொத்தமாக திமுக 42.99 சதவீதம் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. அதிமுக 25.47 சதவீதம் வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. சுயேச்சைகள் 13.01 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளனர். பாஜக 4.92 சதவீதம், காங்கிரஸ் 3.35 சதவீதம், பாமக 1.54 சதவீதம், அமமுக 1.40 சதவீதம், நாம் தமிழர் கட்சி 1.35 சதவீதம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 1.15 சதவீத வாக்குகளைப் பெற்றள்ளது.
News18