வெற்றியின் சூத்திரம்… செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பேட்டி

5 வயது முதல் செஸ் விளையாட தொடங்கிவிட்டதாகவும் உலக நம்பர் ஒன் செஸ் கிராண்ட் மாஸ்டர் கார்சல்சனுக்கு எதிரான போட்டியில் இயல்பாகவே விளையாடியதாகவும் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா தெரிவித்தார்.

இணையம் வழியாக நடைபெற்ற எர்த்திங் மாஸ்டர்ஸ் எனும் ரேபிட் முறையிலான செஸ் தொடரின் 8-வது சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தாவும் உலகின் நம்பர் ஒன் செஸ் விளையாட்டு வீரருமான கார்சல்னும் கடந்த 21-ம் தேதி மோதினார்கள்.  இந்த போட்டியில்  கார்சலனை  பிரக்ஞானந்தா தோற்கடித்து வெற்றி பெற்றார்.

இதனை கவரவிக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த குரோம்பேட்டையில் உள்ள பிரபல ரேலா மருத்துவமனை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக குழு இயக்குனர் பேராசிரியர் முகமது ரேலா மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டு பிரக்ஞானந்தாவுக்கு  பூங்கொத்து கொடுத்து அற்புதமான சாதனைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.