மருந்து கடைகளுக்கு தீ வைத்த மருத்துவ மாணவர்கள்- பீகாரில் பதற்றம்

பீகார் மாநிலம் தர்பங்கா நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருந்துகள் கடை விற்பனையாளர்களுக்கும்,  மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

இதையடுத்து அங்கிருந்த 4 கடைகள் மீது, மருத்துவ மாணவர்கள் சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். மருத்துவ கடை ஊழியர் ஒருவரும் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.இந்த தாக்குதலில் மூன்று போலீசார் காயமடைந்தனர்.

கடைகள் மற்றும் பல வாகனங்கள் தீக்கிறையாகின. இதை கண்டு அங்கு திரண்ட மருந்து விற்பனையாளர் வர்த்தக சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. உடனடியாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்பங்கா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Malaimalar