உத்தர பிரதேசத்தை யோகி ஆதித்யநாத் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வார் – பிரதமர் மோடி கருத்து

உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ள நிலையில், முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்க உள்ள யோகி ஆதித்யநாத் டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

உத்தர பிரதேசத்தில் அமைய உள்ள புதிய அமைச்சரவை மற்றும் பாஜக அரசு பதவியேற்பு குறித்து பிரதமர், உள்துறை மந்திரி மற்றும் பாஜக தேசிய தலைவருடன் இந்த சந்திப்பின் போது ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து தமது ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆதித்யநாத் உத்தரபிரதேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தார். வரும் ஆண்டுகளில், அவர் (ஆதித்யநாத்) மாநிலத்தை வளர்ச்சியுடன் கூடிய உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வார் என்று முழு நம்பிக்கையுடன் உள்ளார். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள யோகி ஆதித்யநாத்திற்கு வாழ்த்து தெரிவித்து தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமித்ஷா, பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ் அவர் [யோகி ஆதித்யநாத்] ஏழைகளுக்கான மத்திய அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்திய விதம் மற்றும் சட்டம் ஒழுங்கை பலப்படுத்திய விதம், அதே அர்ப்பணிப்புடன் அவர் தொடர்ந்து மாநிலத்திற்கு சேவை செய்வார் என்று நான் நம்புகிறேன் என கூறியுள்ளார்.

 

Malaimalar