ஆசிய வளர்ச்சி வங்கி தெற்காசிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தெற்காசிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7 சதவீதமாக இருக்க வாய்ப்பு உள்ளது. 2023-ம் ஆண்டில் முதல் காலாண்டில் அது 7.4 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் 2023-ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். அடுத்த நிதியாண்டு தொடக்கத்தில் அது 8 சதவீதமாக உயர வாய்ப்பு உள்ளது.
பாகிஸ்தானில் மிக மோசமான அளவுக்கு பொருளாதார வளர்ச்சி 4 சதவீதமாக உள்ளது. அது வரும் நாட்களில் 4.5 சதவீதமாக உயர வாய்ப்பு இருக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், பூடான் ஆகிய நாடுகளை கொண்ட தெற்காசியாவில் பொருளாதார மேம்பாடு கொஞ்சம் கொஞ்சமாக மேம்படும். கொரோனா தாக்குதலுக்கு பிறகு தற்போது பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Malaimalar