கர்நாடக பெண்ணுக்கு பாராட்டு – இந்தியாவின் உள்விவகாரத்தில் நுழையும் அல் கொய்தா

கர்நாடக மாநிலத்தின் கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டத்தின்போது அங்குள்ள தனியார் கல்லூரியில் முஸ்கான் என்னும் மாணவி ஹிஜாப் அணிந்து வந்தபோது, சில மாணவர்கள் சூழ்ந்து ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து, அந்த மாணவி பதிலுக்கு, அல்லாஹூ அக்பர் என கோஷமிட்டார்.

இந்நிலையில், அல்-கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி வெளியிட்டுள்ள 8 நிமிட வீடியோவில், கர்நாடக மாணவி முஸ்கானுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், அல் கொய்தாவின் ஷபாப் ஊடகம் வெளியிட்ட வீடியோவில், ஹிஜாப் தொடர்பான அடக்குமுறைக்கு எதிர்வினையாற்ற வேண்டும். இந்தப் பெண் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களை பார்த்தேன். அவரது துணிவு குறித்து அறிந்து உருகினேன். இதனாலேயே கவிதை எழுதி பாராட்ட முடிவுசெய்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் உன்னத பெண் என எழுதப்பட்ட ஒரு போஸ்டருடன் அவர் கவிதை நடையில் பாராட்டு தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் உள் விவகாரங்களில் அல்-கொய்தா அமைப்பின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

 

Malaimalar