இந்தியாவுடன் நல்லுறவை பாகிஸ்தான் விரும்புகிறது- ஷபாஸ் ஷெரீப் பேச்சு

பாகிஸ்தானின் 23வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப், அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:

ஆட்சி மாற்றத்தில் வெளிநாட்டு சதி இருப்பதாக இம்ரான் கானின் குற்றச் சாட்டுகள் நாடகம், அதை நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்து விட்டு வீட்டுக்குச் செல்வேன்.

நாங்கள் இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறோம், ஆனால் காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு இல்லாமல் அது நடக்காது.  இரு தரப்பிலும் வறுமை இருப்பதைப் பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும்.

ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண வருமாறு மோடிக்கு அழைப்பு விடுக்கிறேன், பின்னர் ஒன்றாக வறுமையை ஒழிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Malaimalar