குவாட் மாநாட்டில் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க ஆவலாக உள்ளேன் – அதிபர் ஜோ பைடன்

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான ராணுவ மற்றும் வெளியுறவு மந்திரிகள் இடையிலான ஆலோசனை கூட்டம் அமெரிக்காவில் நடைபெறுகிறது.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் காணொலி வாயிலாக உரையாடினர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, உக்ரைனின் புச்சா நகரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது கவலையளிப்பதாக உள்ளது. இதற்கு இந்தியா உடனடியாக கண்டனம் தெரிவித்ததுடன், உரிய விசாரணை நடத்தவும் வலியுறுத்தியது. இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் பேச்சில் போரை முடிவுக்கு கொண்டு வரும் வாய்ப்பு ஏற்படும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது:

உக்ரைன் மக்களுக்கு மனிதாபிமான முறையில் இந்தியா செய்து வரும் உதவிகளை பாராட்டுகிறேன். இந்தப் போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், ஏற்படக் கூடிய தாக்கங்களை தொடர்ந்து கண்காணித்து, நிலைமையை எப்படி சமாளிப்பது என்பதில் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்.

மே 24-ம் தேதி ஜப்பானில் நடைபெற உள்ள குவாட் மாநாட்டில் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க ஆவலாக உள்ளேன் என குறிப்பிட்டார்.

 

 

Malaimalar