இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ரகசிய சுரங்கப்பாதை: பயங்கரவாதிகள் ஊடுருவலா என போலீசார் சந்தேகம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரகசிய சுரங்கப்பாதை ஒன்றை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த சுரங்கப்பாதை இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகில் உள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீருக்கு வருகை தந்தபோது, பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைய இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து மேலும் பயங்கரவாதிகள் வந்து செல்ல வசதியாக சில சுரங்கப்பாதைகள் எதுவும் தோண்டப்பட்டிருக்கிறதா என போலீசார் திவீர சோதனை நடத்தி வருகின்றனர்.

Malaimalar