அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் கொரோனா தடுப்பு 2வது சர்வதேச உச்சி மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
உலகளாவிய சுகாதார பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க. உலக சுகாதார அமைப்பை பலப்படுத்தப்பட வேண்டும். உலக வர்த்தக அமைப்பின் விதிகள் மிகவும் எளிமையானதாக இருக்க வேண்டும்.
தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகளுக்கான உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் செயல்முறை மற்றும் விநியோகச் சங்கிலி நிலையானதாக இருக்க இந்தியா விரும்புகிறது.
எதிர்கால சுகாதார அவசர நிலைகளை எதிர்த்துப் போராடுவதற்கு ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை தேவை என்பது தெளிவாகிறது. நாம் நெகிழ்வான உலகளாவிய விநியோகச் சங்கிலியை உருவாக்க வேண்டும். தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளுக்கு சமமான அணுகுமுறையை செயல்படுத்த வேண்டும்.
உலகளாவிய சமூகத்தின் பொறுப்பான உறுப்பினராக இந்தியா உள்ளது. குறைந்த செலவில் உள்நாட்டு கொரோனா தடுப்பு தொழில்நுட்பங்கள், தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகளை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் தொடர்ந்து இந்தியா பங்கு வகிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Malaimalar