மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா தடுப்பூசி பயன்பாடு குறைவு – சுகாதாரத்துறை எச்சரிக்கை

மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

தற்போது மந்த நிலையில் உள்ள தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க உந்துதல் தேவை.

தடுப்பூசி செலுத்திக் கொள்வதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூன், ஜூலை மாதங்களில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை மாநில சுகாதாரத்துறை முன்னெடுக்க வேண்டும்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வீடு வீடாகச் சென்று அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.

தகுதியுடைய பயனாளிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் காலாவதியான தடுப்பூசிகளைப் பயன்படுத்தவில்லை என்பதையும், தடுப்பூசிகள் வீணாகாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

 

 

Malaimalar