சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு பேட்டரி கார்கள் வசதி

சென்ட்ரல் நிலையத்தில் மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள பேட்டரி கார்கள் மூலம் தினமும் 2 ஆயிரம் பயணிகள் பயனடைந்து வருகிறார்கள்.

தற்போது 2 பேட்டரி கார்கள் மூலம் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் இருந்து மூர்மார்க்கெட் புறநகர் மின்சார நிலையம் மற்றும் சென்ட்ரல் எம்.ஜி.ஆர் ரெயில் நிலையம் ஆகிய இடங்களுக்கு மாற்று திறனாளிகள், வயதானவர்களை இலவசமாக ஏற்றி செல்கிறார்கள். மேலும் பயணம் செய்ய உள்ள ரெயில் பெட்டி வரை அழைத்து செல்கிறார்கள்.

காலை முதல் இரவு வரை நடைபெறும் இந்த சேவையால் வயதான பயணிகள், மாற்றுதிறனாளிகள் 2 ஆயிரம் பேர் இதன் மூலம் இலவசமாக பயன்பெற்று வருகிறார்கள். இதனால் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

 

 

Malaimalar