காவல்துறை குற்றங்கள் இல்லாத நிலையை உருவாக்கும் துறையாக மாறவேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் குடியரசுத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் காவல் துறையினருக்கு பதக்கங்கள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தப் பதக்கங்கள் காவல் துறையினருக்கு கிடைத்துள்ள பெரும் அங்கீகாரம். காவல் துறை என்றாலே தண்டனை வழங்கும் துறையாக பார்க்கிறார்கள்.

காவல்துறை, குற்றங்கள் இல்லாத நிலையை உருவாக்கும் துறையாக மாறவேண்டும். காவல்துறைக்கு தலைக்குனிவை ஏற்படுத்தும் நிலையை எந்தக் காவலரும் உருவாக்கி விடக்கூடாது

அரசியல், சாதி, மதம் காரணமாக வன்முறைகள் உருவாகாமல் தடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

 

 

 

Malaimalar