இந்தியா, வியட்நாம் இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்தியா, வியட்நாம் இடையிலான ராணுவ உறவை 2030-ம் ஆண்டு வரை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

வியட்நாமுடனான இந்த இரு ஒப்பந்தங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் அரசுமுறை பயணமாக தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமுக்கு நேற்று முன்தினம் சென்றார். அந்நாட்டு ராணுவ மந்திரி ஜெனரல் பான் வான் ஜியாங்கை நேற்று சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கை: இருதரப்பு உறவை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்தோ, பசிபிக் பகுதியின் ஸ்திரத்தன்மைக்கு இந்த ராணுவ மற்றும் பாதுகாப்பு உறவு முக்கிய காரணியாக உள்ளது. அதைத்தொடர்ந்து, 2030-ம் ஆண்டுக்கான இந்தியா, வியட்நாம் ராணுவ உறவின் கூட்டறிக்கையில் இருநாடுகளும் கையொப்பமிட்டன.

இரு நாட்டு ராணுவமும், பராமரிப்பு மற்றும் இதர பணிகளுக்கு தங்கள் ராணுவ தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தானது என தெரிவித்தார்.

 

Malaimalar