கருமுட்டைகள் எடுப்பதில் விதியை மீறினால் 5 லட்சம் ரூபாய் அபராதம்

தற்போது அமலுக்கு வந்திருக்கும் சட்டத்தின்படி, 23 முதல் 35 வயதுக்குள்ளான பெண்ணிடம் மட்டுமே கருமுட்டைகள் எடுக்க முடியும்.

ஈரோடு விவகாரத்தின் எதிரொலியாக இச்சட்டம் தமிழ்நாட்டில் உடனடியாக அமலுக்கு வரும் என தமிழக அரசு 7-ந் தேதி அறிவித்தது.

ஈரோடு சினைமுட்டை விவகாரம் எதிரொலியாக தமிழ்நாட்டில் Assisted Reproductive Technology Regulation 2021 சட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் மத்திய அரசால் கடந்த ஆண்டு இயற்றப்பட்டது. ஆனால் இதுவரை அதை அமல்படுத்துவதற்கான விதிகள் மாநிலத்தில் அறிவிக்கப்படவில்லை. தற்போது ஈரோடு விவகாரத்தின் எதிரொலியாக இச்சட்டம் தமிழ்நாட்டில் உடனடியாக அமலுக்கு வரும் என தமிழக அரசு 7-ந் தேதி அறிவித்தது.

இச்சட்டத்தை அமல்படுத்த ஐந்து பேர் கொண்ட குழுவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை கூடுதல் செயலர் தலைமையில் இந்த குழு இயங்கும். குடும்பநலத்துறை இயக்குநர் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண்கள் அமைப்பை சேர்ந்த வசுதா ராஜசேகர், சட்டத்துறை உதவி செயலர், மகப்பேறு பேராசிரியர் மோகனா உள்ளிட்டோர் குழுவில் உள்ளனர். ஏற்கனவே 2005-ம் ஆண்டு ஐ.சி.எம்.ஆர்.

வகுத்த வழிகாட்டுதல்கள் மட்டுமே அமலில் இருந்தன. அதன்படி ஒரு கருத்தரிப்பு மையம் மாநில அதிகாரிகளிடம் பதிவு செய்திருக்க வேண்டும், லாப நோக்கில் ஈடுபடக்கூடாது, 18 முதல் 35 வயது பெண்களிடம் இருந்து மட்டுமே கரு முட்டைகள் எடுக்க முடியும். தற்போது அமலுக்கு வந்திருக்கும் சட்டத்தின்படி, 23 முதல் 35 வயதுக்குள்ளான பெண்ணிடம் மட்டுமே கருமுட்டைகள் எடுக்க முடியும். வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே அதுவும் ஏழு முட்டைகள் மட்டுமே கரு கொடுக்க முடியும்.

சம்பந்தப்பட்ட மருத்துவர், முட்டை அளிக்கும் பெண் எந்த வகையிலும் தவறாக பயன்படுத்தக்கூடாது, எந்த மோசடியிலும் ஈடுபடக்கூடாது.

மீறி ஈடுபட்டால், முதல்முறை குறைந்தபட்சம் ஐந்து லட்சமும் அதிகபட்சம் பத்து லட்சமும், மறுமுறை தவறு செய்தால் மூன்று ஆண்டுகள் முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் பத்து லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

 

Malaimalar