பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்ததால் நண்பர்கள் அவரை கேலி கிண்டல் செய்தனர். இதில் விரக்தி அடைந்த கல்லூரி மாணவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்ததால் மாணவர் தற்கொலை செய்தாரா? அல்லது அவரது சித்தி கொலை செய்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மசூலிப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி ராஜ். இவரது முதல் மனைவி லட்சுமி நரசம்மா. அவர் விஜயவாடாவில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 4 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சாந்தி ராஜ், கவுரி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு மசூலிப்பட்டினத்தில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். லட்சுமி நரசிம்மாவின் மகன் பிரபு (வயது 16).

தனது தந்தையுடன் மசூலிப்பட்டினத்தில் தங்கி அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். பிரபு தனது நண்பர்களுடன் பப்ஜி விளையாட்டில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் பப்ஜி விளையாடிக்கொண்டு இருந்தார்.

அப்போது விளையாட்டில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் நண்பர்கள் அவரை கேலி கிண்டல் செய்தனர். இதில் விரக்தி அடைந்த பிரபு இரவில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரபு தூக்கில் தொங்குவதை கண்ட சாந்தி ராஜ் மற்றும் அவரது மனைவி கதறி அழுதனர். இதுகுறித்து சிலகளபுடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரபு பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறிபட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பிரபுவின் தாய் தனது மகனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக 2-வது மனைவி கவுரி மீது போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்ததால் பிரபு தற்கொலை செய்தாரா? அல்லது அவரது சித்தி கொலை செய்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Malaimalar