ஹிட்லருக்கு எப்படி மரணம் நேர்ந்ததோ அப்படித்தான் பிரதமர் மோடிக்கும் நேரும்- காங்கிரஸ் தலைவரின் சர்ச்சை பேச்சு

அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் முன்னாள் மந்திரி சுபோத் காந்த் சஹாய் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் நேற்று ஜந்தர் மந்தரில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி சுபோத் காந்த் சஹாய் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். ஹிட்லரைப் போல நடந்து கொள்பவர்கள் அவரைப்போல் தான் இறப்பார்கள். பிரதமர் மோடியும் ஹிட்லரைப் போலதான் இறப்பார் என தெரிவித்தார்.

அவரின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்கள் மோடிமீது அன்பு வைத்திருப்பதால் தொடர்ச்சியாக அவரை வெற்றி பெறச்செய்து வருகின்றனர். இதனால் காங்கிரஸ் விரக்தி அடைந்திருக்கிறது என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

 

Malaimalar