ராஜ்பவனில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்

சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையில் யோகா தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு யோகாசனங்களை செய்தார்.

8-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையில் யோகா தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்று காலை 6.30 மணிக்கு ராஜ்பவனில் யோகா தின நிகழ்ச்சி தொடங்கியது. அதில் கவர்னர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி, கவர்னர் மாளிகை ஊழியர்கள், அண்ணா பல்கலைக்கழகம், விளையாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

ஒரு மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு யோகாசனங்களை செய்தார். நிகழ்ச்சியில் மாணவர்களும் யோகாசனங்களை செய்தனர்.

 

Maliamalar